ஆதார் பயன்பாட்டை நிறுத்த செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் யாரிடமும் ஆதார் தொடர்பான தகவல்களை பெற முடியாது. எனவே, டெலிபோன் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆதார் தகவல்களை தரத்தேவையில்லை.
இந்நிலையில் ஆதார் பயன்பாட்டை நிறுத்த செயல்திட்டத்தை தாக்கல் செய்ய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இ-கேஒய்சிக்காக தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்தி வந்தது. இப்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், ஆதார் பயன்பாட்டை நிறுத்த செயல்திட்டத்தை தாக்கல் செய்ய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் இதை தாக்கல் செய்யுங்கள் என்று ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.