ஆதார் அட்டை பயன்பாட்டால் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவை மிச்சப்படுத்தியுள்ளதாக, ஆதார் அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் ஜெ.சத்திய நாராயணா, “ஓய்வூதியம் ஊரக வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆதார் அட்டை முக்கியமாக கருதப்படுவதாக கூறினார்.
இதனால், நாளொன்றுக்கு சராசரியாக 3 கோடி பேர், ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். இதனால், உணவு மற்றும் பொது விநியோக திட்டம், ஊரக வேலைவாய்ப்பு, ஆகிய துறைகளின் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகியுள்ள நிலையில், மத்திய அரசின் சேமிப்புத் தொகை அதிகரித்துள்ளது” என்றும் சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.