18வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88 புள்ளி 06 மீட்டர் தூரம் வீசி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தருண் 48 புள்ளி 96 வினாடியில், பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் 6 புள்ளி 51 மீட்டர் தூரம் தாண்டி, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில், இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூயிங்கை, பி.வி.சிந்து எதிர்கொள்கிறார். இதுவரை 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 41 பதக்கங்கள் வென்று, பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: ஆசிய விளையாட்டு போட்டிஇந்திய வீரர் நீரஜ் சோப்ராதங்கம் வென்றார்
Related Content
இன்ப அதிர்ச்சியில் இந்தியா... யார் இந்த நீரஜ் சோப்ரா?
By
Web Team
August 7, 2021
ஆசிய போட்டியில் பதக்கம்: கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை
By
Web Team
May 2, 2019
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரித்துவுக்கு ரூ. 15 லட்சம் ஊக்கத்தொகை: அதிமுக
By
Web Team
April 30, 2019
தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
By
Web Team
September 2, 2018
18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு
By
Web Team
September 2, 2018