ஆசிய கோப்பை கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி அசத்தல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 137 ரன்கள் வித்யாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டியில், “பி” பிரிவு இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விக்கெட் சரிந்த போதும் முஸ்பிகுர் 144 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி, 261 ரன்களை எடுத்தது. பின்னர், களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 35.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

 

Exit mobile version