ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் “ஏ” பிரிவு கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
கடைசியாக லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்திருந்தது.
ஓராண்டுக்கு முந்தைய தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை துபாய் மைதானம் அவர்களது சொந்த மைதானமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் யுவேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பாகிஸ்தானின் சர்ப்ரஸ் அகமது, பாபர் அசாம், இமாம் உல் ஹக், பஃக்கர் ஜமாம் ஆகியோர் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்தே போட்டியின் முடிவு இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.