ஆங் சான் கவுரவ குடியுரிமை ரத்து- கனடா அரசு நடவடிக்கை

 

ஆங் சான் சுகியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்து கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மியான்மர் அரசின் ஆலோசகரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகிக்கு, கனடா அரசு கடந்த 2007 ஆம் ஆண்டு கவுரவ குடியுரிமை வழங்கியிருந்தது. இந்த நிலையில், ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான ராணுவத்தின் அடக்குமுறையை தடுக்க தவறியதாக ஆங் சான் சூகி மீது புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையால் சர்வதேச அளவில், ஆங் சான் சூகியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது.

இந்த சூழலில், ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமையை ரத்து செய்ய கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமை ரத்தாகியுள்ளது.

Exit mobile version