அலுவலக ஊழியர்களுடன் நடனம் ஆடிய பெண் சி.இ.ஓ

மன அழுத்தத்தை போக்கும் விதமாக அலுவலக நேரத்தில் பெண் சிஇஓ ஒருவர் நடனமாடிய  வீடியோடி காட்சி இணையங்களில் வைரலாகி வருகிறது.

இன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால் அதில் பாதி பேர் கார்ப்பரேட் கம்பேனியில் பணி புரிபவர்களாக தான் இருக்கிறனர். இதனாலேயே கர்ப்பரேட் அலுவலகங்களில் தனது மன அழுத்தத்தை, போக்க  வேலைகளுக்கு நடுவே ஆக்டிவிடீஸ், நடனம், விளையாட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் வெல்ஸ் பன் நிறுவனத்தின் பெண் சி.இ.ஓ தீபாலி கொயென்கா வேலை செய்பவர்களை  உற்சாகமூட்டும் வகையில் அலுவலக நேரத்தில் நடனமாடி மகிழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

சிறந்த தலைமை நிர்வாகி என பலராலும் பாராட்டப்படும் நிறுவனத்தின் சி.இ.ஓ இவ்வாறு இறங்கி வந்து சக ஊழியர்களுடன் நடமாடுவது பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version