அருணா ஜெகதீசன் விசாரணை நாளையுடன் நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் 4ஆம் கட்ட விசாரணை நாளை நிறைவடைகிறது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

இதனிடையே துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.இதுவரை 3 கட்டமாக நடைபெற்ற விசாரணையில் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

4-வது கட்ட விசாரணை 17-ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி தெற்கு பீச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.

மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 14 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில், 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் (செப். 20) நிறைவடைகிறது.

Exit mobile version