அமீர்கானின் அடுத்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

அமிதாப் பச்சன், அமீர்கான் நடிப்பில் இயக்குநர் விஜய் கிருஷ்னா ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (thugs of hindostan).

இந்தப்படத்தை யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் சார்பில், ஆதித்தா சோப்ரா தயாரித்து வருகிறார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படம் நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Exit mobile version