ஹோமியோபதி, சித்த மருத்துவம் , முதுநிலை படிப்புகளுக்கு சென்னையில் அடுத்த வாரம் கலந்தாய்வு !

ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு அடுத்த வாரம் கலந்தாய்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி படிப்புக்கு 30 இடங்கள் உள்ளன.

இதில் 15 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ முறை ஆணையர் அலுவலகத்தில் வரும் 15 ம் தேதி நடக்கிறது.

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 34 முதுநிலை படிப்புகளுக்கும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள 60 முதுநிலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க 11-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி,சென்னை இந்திய மருத்துவ முறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Exit mobile version