ஸ்டெர்லைட் மூடப்படுமா? திறக்கப்படுமா? – 6 வாரங்களில் முடிவு

6 வாரங்களில், ஸ்டெர்லைட் குறித்த ஆய்வறிக்கை, தாக்கல் செய்யப்படும், என ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான, மூவர் குழு ஆய்வை தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து தமிழக அரசு ,அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி ,ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக்குழு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில்,தருண் அகர்வால் தலைமையிலான குழு , ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் உப்பாற்று ஓடையில் ஆய்வு செய்தது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து 6 வாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவிதார்.

தருண் அகர்வால் குழுவினர், இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் காலை 11.30 க்கு இந்த சந்திப்பு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version