ஸ்டாலினுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு

மு.க.ஸ்டாலின் வருங்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறினார்.

வருங்காலத்தில் எதிர்க் கட்சித் தலைவராக கூட ஸ்டாலின் வர முடியாது என்று விமர்சித்த அவர், அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Exit mobile version