வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தில் இடமில்லை- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

 

வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூன்று இடங்கள் உட்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த திங்கள்கிழமை அந்நிறுவனங்களுடன் டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள 3 இடங்களில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, அதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது. வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிப்பதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான, தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version