வீழ்ச்சியில் பங்கு வர்த்தகம் – கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருந்தன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்து 36 ஆயிரத்து 305 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 175 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10 ஆயிரத்து 967 புள்ளிகளாக முடிவடைந்தது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகளின் வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவையே இதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீன இறக்குமதிப் பொருள்களுக்கு இரு முறை வரி விதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பு சீனாவின் ஏற்றுமதி நடவடிக்கைக்கு பேரிடியாக அமைந்தது. இது உலக பங்குச் சந்தைகள் மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் அந்நிய நிதி நிறுவனங்கள் சாதகமற்ற சூழ்நிலையை கருதி, ரூ.2,433.15 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

Exit mobile version