"விஸ்வாசம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4- வதாக அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, தம்பிராமையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் 3ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டது. இந்தநிலையில், விஸ்வாசம் படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. வயதான மற்றும் இளமையான தோற்றத்தில் அஜித் இருவேடங்களில் இருப்பது போன்று போஸ்டர் வெளியாகி உள்ளது. இது, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version