விநாயகர் சதுர்த்தி – பிரதமர் வாழ்த்து

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பிரதமர் தனது வாழ்த்தையும், விநாயகர் படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Exit mobile version