விஜய் மல்லையா – 'The King Of Good Times' டூ 'The King Of Bad Times'

விஜய் மல்லையா, business-ல் கொடிக் கட்டி பறந்தவர். ஒரு காலத்தில் தொட்டது எல்லாம் துலங்கியது. Kingfisher Beer, Airlines மூலம் business உலகில் தன் பெயரையும் பதித்ததோடு, முடி சூடா மன்னனாக விளங்கினார் விஜய் மல்லையா. பிறவிப் பணக்காரரான விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா இங்கிலாந்தில் டாக்டர் படிப்பு முடித்து, இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றியவர்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட விஜய் மல்லையா, படிப்பில் கெட்டிக்காரர். St Xavier கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையின் நிறுவனமான United Breweries Ltd ரூ.400 சம்பளத்திற்கு பணியாற்றினார். அமெரிக்காவின் Southern California பல்கலைக் கழகத்தில் தொழில் நிர்வாக மேலாண்மையில் முனைவர் பட்டம் வென்றார் விஜய் மல்லையா.

தனது தந்தை நெஞ்சு வலியால் இறந்துவிட, தன்னுடைய 28 வயதில் United Breweries Ltd-ன் Chairman-ஆக நியமிக்கப்பட்டார் விஜய் மல்லையா. விஜய் மல்லையா, தன்னுடைய நிர்வாக திறமையால் United Breweries Ltd-கீழ் இயங்கும் 60 நிறுவனங்களின் வருவாயை 11 மில்லியன் டாலருக்கு உயர்த்தினார்.

1978ஆம் ஆண்டு Kingfisher Beer-ன் 33% பங்குகளை வாங்கினார் விஜய் மல்லையா. Kingfisher Beer-மூலம் இந்திய பீர் சாம்ராஜயத்தில் விஜய் மல்லையா தனி முத்திரை பதித்தார். Kingfisher, Berger Paints, Best & Crompton, Manglore Chemical Fertilizer Ltd, The Asian Magazine ஆகியவை நடத்தி business-ல் கொடிக் கட்டி பறந்தார் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா, கையில் வைரங்களில் VJM என்ற பெயர் பதிக்கப்பட்ட Bracelet chain-னும், விரல்களில் Emerald கல் பதித்த மோதிரத்தையும் அணிந்து ஒரு Stylish மன்னனாக வலம் வந்தார். அவருக்கு பிடித்த நிறமான சிவப்பு நிறத்தை தன்னுடைய நிறுவனங்களிலும் பயன்படுத்தினார்.

விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்ட விஜய் மல்லையா, விளையாட்டு துறைகளிலும் கால் பதித்தார். Formula One கார் பந்தயத்தில், இந்தியாவின் முதல் பந்தய அணியாக, Force India-வை அறிமுகப்படுத்தினார் விஜய் மல்லையா. அதுமட்டுமின்றி, Kingfisher East Bengal Football Club, குதிரை பந்தயம், கிரிக்கெட்டில் RCB அணியையும் வாங்கினார் விஜய் மல்லையா.

நான்கு தீவுகள் கொண்ட Sainte Marguerite சொகுசு பங்களா, தென்னாப்பிரிக்காவில் Mabula Game Lodge, காலிஃபோர்னியாவில் சொகுசு பங்களா, நியூயார்க்கில் Trump Plaza, கோவாவில் Kingfisher Villa, Indian Empress சொகுசு கப்பல், என அனைத்துக்கும் சொந்தக்காரராக மாறினார் விஜய் மல்லையா.

உலகம் முழுவதும் 26 நாடுகளில் பரவி இருந்த தன்னுடைய Business-யை பார்க்க செல்ல தனியாக Boeing 727 விமானத்தை பயன்படுத்தினார் விஜய் மல்லையா. சிறப்புப்பெற்ற பழமையான பொருட்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொண்ட விஜய் மல்லையா, திப்பு சுல்தான் பயனப்படுத்திய வாலை 1,75,000 யூரோ-க்கு வாங்கினார். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மகாத்மா காந்தியின் பொருட்களை வாங்கிய விஜய் மல்லையா, அது நாட்டுக்காக வாங்கியதாக கூறினார்.

ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டிய விஜய் மல்லையா சபரிமலையில் மேற்கூரை அமைக்க நன்கொடை வழங்கினார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 20 முறை சபரிமலைக்கு விஜய் மல்லையா சென்றுள்ளார்.

1986ஆம் ஆண்டு Air India-யாவில் பணியாற்றிய பணிப்பெண்ணான சமீராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் மல்லையா-சமீரா தம்பதிக்கு சித்தார்த் என்ற ஆண் வாரிசு பிறந்தது. 1993ஆம் ஆண்டு விஜய் மல்லையா-சமீரா தம்பதியினர் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள ரேகா என்ற பெண்ணை மணந்தார் விஜய் மல்லையா.

Forbes நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர் பட்டியிலில் விஜய் மல்லையா பெயரும் இடம் பெற்றது. 2000ஆம் ஆண்டு அகில பாரத ஜனதா தளத்தில் இணைந்த விஜய் மல்லையா, பின் அக்கட்சியிலிருந்து விலகி, சுப்பிரமணியன் சுவாமி கட்சியான ஜனதா கட்சியில் செயல் தலைவராக 2003-ல் இணைந்தார்.

நஷ்டத்தில் இயங்கிய Air Deccan என்ற விமான சேவையை வாங்கிய விஜய் மல்லையா, Kingfisher Red என பெயர் மாற்றி Fly The Good Times என்ற Slogan- னுடன் நடத்தினார். இதுதான் விஜய் மல்லையாவின் Business சரிவுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. இதற்கு தன் மகனான சித்தார்த் மல்லையாவை தலைவர் ஆக்கினார் விஜய் மல்லையா. ஆனால், சித்தார்த் ‘Kingfisher Bikni Calendar’-ல் அதிக கவனம் செலுத்தியதால் விமான சேவை நஷ்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த விஜய் மல்லையாவிற்கு, 2006ஆம் ஆண்டிலிருந்து சரிவு ஏற்பட்டது.
நஷ்டத்தை ஈடு கட்ட ஸ்டேட் வங்கி, IDIB வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என மொத்தம் 17 வங்கிகளிடமிருந்து
ரூ.6,500 கோடிக் கடன் வாங்கினார் விஜய் மல்லையா.

தொடர்ந்து ஊழியர் சம்பள பாக்கி, சர்வதேச விமான உரிமம் ரத்து ஆனதால் Kingfisher விமான சேவை ரத்து செய்யப்பட்டது என விஜய் மல்லையாவிற்கு அடுத்தடுத்த அடிகள் விழுந்தன. வங்கி கடன் திருப்பி கட்ட அவர் கொடுத்த ரூ.7000 கோடி Cheaque Bounceஆனதால் வங்கிகள் நீதிமன்றத்தை நாடியது. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அவரது Passport-யை முடக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வலியுறுத்தியது. ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே லண்டனுக்கு தப்பி சென்றார்.

அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சியில் பெருமளவு தோல்வியில் முடிந்தது. இறுதியாக லண்டன்-ல் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு, விஜய் மல்லையாவிற்கு வார செலவாக ரூ.4,34,000 வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி, ‘The King Of Good Times’ஆக இருந்த விஜய் மல்லையா ‘The King Of Bad Times’ என தற்போது வர்ணிக்கப்படுகிறார்.

பயிர் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல், வங்கிகாளால் அவமானப்படுத்தப்பட்டு எத்தனையோ விவசாயிகள் மாண்டுள்ளனர். ஆனால் கோடியில் கடன் வாங்கி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவிற்கு வார மட்டும் ரூ.4,34,000. இதே உலகில் தான், நாமும் சகிப்புத் தன்மையுடன் வாழ்கிறோம்.

Exit mobile version