வார நாட்களில் நீதிபதிகள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்கோய்

வார நாட்களில் நீதிபதிகள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்கோய் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றங்களில் அதிக அளவில் வழக்குகள் தேங்கியிருப்பதை கருத்தில் கொண்டு அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று, மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. பணிச்சுமை அதிகமாக இருப்பதால், நீதிபதிகள் யாரும் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்கோய் வலியுறுத்தி உள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்து விடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version