வாக்காளர் பட்டியல் திருத்தம் – தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிதாகப் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்  நடைபெற்றது. 

67 ஆயிரத்து 644 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து  வாக்காளர்கள் அளித்தனர். 

வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான தகவல், புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் மூலம் தெரிவிக்கலாம். chennaideo2017@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Exit mobile version