வாக்காளர் பட்டியலில் நடிகை, யானை, மான் உள்ளிட்ட படங்கள்

நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் வாக்களர் இறுதி பட்டியல் சரி பார்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் வாக்காளர் பெயர் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் உத்திரபிரதே மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் படமும், மான், யானை, புறா உள்ளிட்டவைகளின் படமும் இடம் பெற்றுள்ளது. இது, மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறுகள் விரைவில் திருத்தப்பட்டு சரியான இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version