வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்

மழைக்கால கூட்டத் தொடரின்போது எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வங்கிகளில் அதிகரித்துள்ள மோசடி, பெண்கள் பாதுகாப்பு விவகாரம், தேசிய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே. குரியனின் பதவிக்காலம் கடந்த 1-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Exit mobile version