வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம்

வருமானவரி தாக்கல் செய்ய அக்டோபர் 31-ம் தேதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மீண்டும் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த வருமான வரித் துறை, தணிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Exit mobile version