ரூ.495.87 கோடி மதிப்பீட்டில் 17 துணை மின் நிலையங்கள் திறப்பு

ரூ.495.87 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை போரூரில் ரூ.245.25 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையத்தை, முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் ரூ.250.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். விருதுநகர், மதுரை, தரும்புரி, ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என மொத்தம் 14 மாவட்டங்களில் துணை மின் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமீன், பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version