ருவாண்டா அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு

ருவாண்டாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு  பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ருவாண்டா அரசின்  கிரிங்கா  என்ற ‘குடும்பத்துக்கு ஒரு பசு’  என்ற திட்டத்துக்காக 200 பசுக்களை அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.   இதையடுத்து ருவாண்டா அதிபர் பால் ககமேவை சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். இதன்பின்னர், அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருடனான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, விரைவில் ருவாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில்  உகாண்டாவுக்கு இன்று செல்லும்  பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசவுள்ளார். உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர்  ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறையாகும். இதன்பின்னர், நாளை தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

Exit mobile version