ரியல் ஹீரோ விஜய் சேதுபதி- தயாரிப்பாளர் உருக்கம்

 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படம் ரிலீஸாவதற்கு முன்பு பைனான்ஸ் பிரச்சினையால் சிக்கித் தவித்தது. எனவே, இந்தப் படத்துக்காகத் தான் வாங்கிய சம்பளம் 3 கோடி ரூபாய் மட்டுமின்றி, தன் கையில் இருந்தும் 1 கோடி ரூபாயைக் கொடுத்து விஜய் சேதுபதி உதவியுள்ளார்.இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ,ஹிதேஷ் ஜபக், விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

“வாழ்த்துகள் விஜய் சேதுபதி. ‘96’ திரைப்படத் தயாரிப்பாளருக்கு செய்த பண உதவிக்காக மட்டுமல்ல. உங்களுடைய நல்ல நோக்கம்தான் இதில் பெரிது. ரியல் ஹீரோ நீங்கள். இதுதான் சேது வழி! என உணர்ச்சியை கொட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக்.

Exit mobile version