ராஜஸ்தானில் 31 மலையை காணோம்!!!??? – அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் 31 மலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அதிகார குழு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ராஜஸ்தானில் கடந்த 50 ஆண்டுகளில் 121 மலைகளில் 31 மலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மலைகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைதான் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆரவல்லி மலைத்தொடரின் 115.34 ஹெக்டர் பரப்பளவிலான பகுதியில் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு மலைப்பகுதிகளை பாதுகாக்க தவறி விட்டதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள மலைப் பகுதிகள் அழிக்கப்பட்தும் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு ஒரு காரணம் என கருதுவதாக தெரிவித்தது. இப்போது 31 மலைகள் காணமால் போய்விட்டது. மலைகள் அனைத்தும் காணாமல் போனால் இந்த நாடு என்னவாகும் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மாநிலத்தின் 20 சதவீத மலைப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் பெறும் ராஜஸ்தான் அரசு, மக்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version