ரஷ்ய அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இந்திய – ரஷ்ய இடையேயான 19வது உச்சி மாநாடு, டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இந்த மாநாட்டின்போது, இந்தியா 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க, ரஷியாவுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனிடையே இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின், மாநாட்டிற்கு முன்னதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுகிறார்.

Exit mobile version