"ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தமிட்டபோது -நான் பதவியில் இல்லை"

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தான போது, தான் பதவியில் இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பிரான்ஸ் நிறுவனத்துடன் ரஃபேல் 36 ரக போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில், ரஃபேல் விமான உதிரி பாகங்கள் தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்தையே இந்தியா பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானபோது தாம் பதவியில் இல்லை என தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அரசு விதிமுறைகளை தெளிவாக பின்பற்றுவதாக குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் இரு நாடுகளின் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது என்று கூறினார்.

Exit mobile version