முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு- திமுக வினர் மீது வழக்கு

 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி, எம்.எல்.ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூரில் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர் எஸ் பாரதி, கார்த்திக் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் உண்மைக்கு முரணான கருத்துக்களை அவர்கள் கூறி இருந்தனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசினர். இந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version