முதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு

உலக அளவில் நடைபெறும் நடனப்போட்டிக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவிகோரி, நடிகர் ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

அமெரிக்காவில் உலக அளவிலான நடன போட்டி நடைபெற உள்ளது. இதில், சென்னையை சேர்ந்த மாணவர் குழு பங்குபெறுகிறது. இந்த மாணவர்கள் குழுவுக்கு தமிழக அரசு சார்பில், நிதி உதவி வழங்ககோரி நடனக்குழு மாணவர்களுடன், முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் லாரன்ஸ் சந்தித்தார். அப்போது, நடன மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Exit mobile version