முக்கொம்பு மதகு விரைவில் சரிசெய்யப்படும்

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த பகுதிகளை திருச்சி ஆட்சியர் ராசாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, உடைந்த முக்கொம்பு அணையின் புனரமைப்புப் பணிகள் இன்றே துவக்கப்பட்டு, ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும் என்றார் . இதற்காக, சென்னையில் இருந்து நீரிலும் செயல்படக்கூடிய இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணையை சீரமைத்து முடிக்கும் வரை முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version