மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். நியுயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் – அர்ஜன்டீனா நாட்டைச் சேர்ந்த மார்டின் டெல் போர்டோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மூன்றாவது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், பீட் சாம்பிராசின் சாதனையை சமன் செய்தார்.

Exit mobile version