மீண்டும் அம்பானி முதலிடம்

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் 47 புள்ளி 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 9 புள்ளி 3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

விப்ரோ குழுமத் தலைவர் அஸிம் பிரேம்ஜி 21 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்ஷ்மி மித்தல், 18 புள்ளி 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கவுதம் அதானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

100 பேர் கொண்ட இந்த பட்டியலில், கிரண் மஸூம்தார் ஷா உள்பட 4 பெண்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

Exit mobile version