மாயாவதியின் ஆட்டம் -காங்கிரஸ் கலக்கம்

 

ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்துள்ளதால் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக , மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வந்தது.ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த மாயாவதி ,அக்கட்சிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

முதலில் சட்டீஸ்கரில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது என தெரிவித்த மாயாவதி , இப்போது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் அதே முடிவை எடுத்துள்ளார்.அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மாயாவதியின் இந்த அதிரடி முடிவுகள் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மாயாவதியின் இந்த முடிவுகளுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. ஆனால்
பாஜகவை போல காங்கிரசும் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க நினைப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version