மனுவை விசாரிக்க தனி கூட்டம் – விவசாயிகள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். பாசன வசதி மற்றும் நீர் நிலைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டன. இவறை குறித்து விசாரிக்க சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்த விவசாயிகள், இத்தகையை நடவடிக்கை மூலம் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்று தெரிவித்தனர்.

Exit mobile version