மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 151 மனித எலும்புக் கூடுகளில் 17 சிறுவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது

இலங்கை மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 151 மனித எழும்புக் கூடுகளில் 17 சிறுவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 79 -வது நாளாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா மேற்பார்வையில் சந்தேகத்திற்கிடமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அகழாய்வு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார்.இதுவரை 151 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 144 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில், 17 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது என்றும், இது வரையிலும் கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளில் இருந்து எந்த தடையமும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version