போலி பலாத்கார வீடியோ வெளியிட்ட பாஜக மூத்த தலைவர்

சட்டீஸ்கர் பொதுப்பணித்துறை அமைச்சரை பாலியல் வழக்கில் சிக்க வைத்த பாஜக மூத்த தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்ச ராக இருப்பவர் ராஜேஷ் முனாட். இவர், ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொள்வது போன்ற வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இணையதளங் களில் வெளியானது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், அந்த வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெரிய வந்தது. மேலும், அமைச்சர் ராஜேஷ் முனாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் முராக்கா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான கைலாஷ் முராக்கா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version