பைபிள் மீது விமர்சனம் – இளையராஜா மீது வழக்கு

பைபிள் தொடர்பாக விமர்சித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதத்தைப் போதிக்கும் பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு எனக் கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், இளையராஜாவுக்கு எதிராக, பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெங்களூரூ மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இந்திய கிறிஸ்தவ மகாசபை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகக் கருத்து கூறிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Exit mobile version