"பேட்ட" சூட்டிங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெறுகிறது. இதனையொட்டி ரஜினிகாந்த் விமானம் மூலம் லக்னோ சென்றார். அவருக்கு 40 பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்தனர். படக்குழுவில் 500 பேர் வரை இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் சூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியதால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பல மட்டத்திலான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. சூட்டிங் அரங்கத்திற்குள் நுழைய குறிப்பிட்ட சில அடையாளம் அட்டை கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் சுமார் 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு முடியும் வரை பாதுகாப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version