பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம் – பிரதமர் ஆலோசனை

பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் , மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்துகிறார்.

பொருளாதார பிரச்சனைகள் குறித்த 2 நாள் ஆய்வுக் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். அதன் 2 வது நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version