பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் – அமைச்சர் பாண்டியராஜன்! 

சென்னையில் ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், எச். ராஜா மீது போடப்பட்ட வழக்குக்கு ஏற்றார்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதியலாம் என பேசிய அவர், அரசு குறித்து எச்.ராஜா விமர்சித்ததற்கு பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

காவல்துறை பற்றி பேசியதற்கு  காவல்துறையினரே விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். பெட்ரோல். டீசல் விலை உயர்வை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார். 

Exit mobile version