சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலகம் முழுவதும் உடல் உள்ளுறுப்புகள் திருட்டு, பாலியல் குற்றங்கள், அடிமை தொழிலாளர்கள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் கடத்தப்படுவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் walk for freedom என்ற தலைப்பில், 600 இளைஞர்கள் கலந்து கொண்ட மௌனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் பிரதீப் பிலிப் கலந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது வாய்களில் துணிகளை கட்டிக் கொண்டு மௌனமாக பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் பிரதீப் பிலிப் உலகம் முழுவதும் அடிமைகளாக 18 மில்லியன் மக்கள் இருப்பதாகவும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது தெரிவித்தார். மேலும் இவ்வாறு கடத்தப்படும் பொதுமக்கள் உடல் உறுப்பு திருட்டுக்காகவும் பாலியல் தொழிலுக்காகவும் அடிமை தொழிலாளர்களுக்காகவும் கடத்தப்படுவதாக தெரிவித்தார்.