இந்தியா முழுவதும் இந்த ஆண்டு தொடர்ந்து பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 350க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு கிராமங்கள் தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக கிபேர், பெக், தொபு, டியூன்சங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வெள்ள சீரமைப்புக்கு பணிகளுக்கு 800 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் நெப்யூ ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.