பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு!

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா- ரஷ்யா இடையிலான 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லிக்கு வருகை தந்தார். இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணம் இந்தியா வந்த அவரை, டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் இல்லத்தில், ரஷ்ய அதிபர் புதின் உடனான

மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், புதினை பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவி வரவேற்றார். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் – ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் செய்வது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, புதினுக்கு , பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து அளித்தார். இந்நிலையில், இரு நாட்டு உச்சிமாநாடு இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி முக்கிய ராணுவ ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. அதன்படி, 36 ஆயிரத்து 792 கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவின் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, புதின் சந்திக்க உள்ளார்.

Exit mobile version