பிரதமர் மோடிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

68-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, குடியரசு தலைவர் உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

பிரதமர் மோடி தனது 68வது பிறந்த நாளை இன்று (செப். 17) கொண்டாடி வருகிறார். அவருக்கு தனது ட்விட்டர் பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் ஆற்றல் மிக்க, ஒப்பற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதேபோன்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வாரணாசியில் பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி, அங்குள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.

Exit mobile version