'பியார் பிரேமா காதல்' படத்தின் டிரைலர் புதிய சாதனை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண் – ரைசா. இவர்கள் நடிப்பில், நிகழ்கால காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் `பியார் பிரேமா காதல்’.  இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை, யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர், வெளியிடப்பட்ட 12 மணி நேரத்தில், 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.  பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக இப்படத்தின் டிரைலர் வரவேற்பு பெற்றிருப்பது, படக்குழுவினரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version