பாஸ்டன் நகரில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 6 பேர் காயம்

பாஸ்டன் நகரில் சுமார் 70 இடங்களில் எரிவாயு குழாய் அடுத்தடுத்து வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாரன்ஸ், அண்டோவர் மற்றும் வடக்கு அண்டோவர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் திடீரென்று வெடித்தது. சுமார் 70 இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தில், தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக வீடுகளிலிருந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடங்களுக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Exit mobile version