பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

புதுச்சேரியில் வசித்து வரும், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிஞருமான மன்னர் மன்னன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்தசில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இநநிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அmவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழறிஞரான மன்னர் மன்னன் புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Exit mobile version