பாம்புக்கு தண்ணி காட்டியவரை தெரியுமா?

 

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் ஒரு தனியார் ஜவுளி பிராசசிங் ஆலை உள்ளது.இங்கு தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் இருந்த போது திடீரென ஒரு கருநாகம் ஆலைக்குள் புகுந்து விட்டது. முதலில் அங்கும் இங்கும் ஓடிய கருநாகம் பின்னர் எங்கோ சென்று மறைந்து விட்டது. இதையடுத்து ஆலை நிர்வாகத்தினர் , தொழிலாளர்களிடம் வேலையை பாருங்கள் என சொல்ல அவர்களோ ”விளையாடாதிங்க ஓனர்ஸ்” என்று தயங்கி நின்று விட்டனர். இதையடுத்து, பாம்பு பிடிப்பவரான யுவராஜ் அங்கு வரவழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பதுங்கியிருந்த பாம்பை கண்டுபிடித்த யுவராஜ் ,அதை தான் கொண்டு வந்த பைக்குள் போட படாத பாடு பட்டார்.பைக்குள் போகவே மாட்டேன் என அடம் பிடித்தது பாம்பு.பின்னர் ஏதோ நினைத்த யுவராஜ், கொஞ்சம் தண்ணீரை பிடித்து பாம்பின் மீது ஊற்றினார். நன்றாக நனைந்த நிலையில் பாம்பு கட்டுக்குள் வந்தது. பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Exit mobile version