பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்- இ- இன்சாப் கட்சி வெற்றிபெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க இம்ரான் கான் முயற்சி செய்து வருகிறார். இந்தநிலையில் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இதற்கு நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடன் இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version